“வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ” உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. தர்மபுரியில் பரபரப்பு….!!!

லோடு ஆட்டோவை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டத்திலுள்ள பாலக்கோடு பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் சொந்தமாக லோடு ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் வெங்கடேசன் தனது வீட்டின் அருகே லோடு ஆட்டோவை நிறுத்தி விட்டு தூங்கச் சென்றுள்ளார். அப்போது நள்ளிரவில் வெளியே நிறுத்தப்பட்டிருந்த லோடு ஆட்டோ திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயற்சித்தனர். அதற்குள் லோடு ஆட்டோ முழுவதும் எரிந்து நாசமானது. இதனையடுத்து ஆட்டோவிற்கு தீ வைத்த மர்ம நபர்கள் குறித்து வெங்கடேசன் மாரண்ட அள்ளி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *