‘அந்த நடிகர்களை எனக்கு போட்டியாக நினைக்கவில்லை’…. எல்.கே.ஜி. 2-ஆம் பாகம்… பிரபல நடிகரின் பேட்டி…!!!

தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் நடிகராக திகழும் ஆர்.ஜே.பாலாஜி ஏற்கெனவே எல்.கே.ஜி, மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது ‘ரன் பேபி ரன்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இதனையடுத்து எல்.கே.ஜி. படத்தின் 2-ஆம் பாகத்தை எடுக்க திட்டமிட்டுள்ளார். மேலும் இதுகுறித்து ஆர்.ஜே.பாலாஜி கூறியுள்ளதாவது, ”எனது முதல் படத்தில் அரசியலும், 2-வது படத்தில் ஆன்மிகமும் இருந்தது. ரன் பேபி ரன் திரில்லர் படமாக தயாராகி உள்ளது. இந்த படத்தை ஜியன் கிருஷ்ணகுமார் இயக்குகிறார்.

இதனையடுத்து பேசிய அவர், சினிமாவில் சிவகார்த்திகேயன், சந்தானம் போன்ற எந்த நடிகரையும் எனக்கு போட்டியாக நினைக்கவில்லை. நான் படங்களில் நடிப்பது அதிர்ஷ்டம் என்றும் வாழ்க்கையில் எனக்கு நீண்ட தூரம் ஓடவேண்டும் என்றும் கூறினார். கொரோனா ஊரடங்கின் போது எல்லோரும் திரில்லர் படம் பார்த்து பழகி விட்டதால், இப்போது விதவிதமான திரில்லர் படங்கள் வருகின்றன. மேலும் மைக்கேல் மதன காமராஜன் போல் ஒரு படத்தில் நடிக்க ஆசையாக உள்ளது” என்றார்.