#லைவ் அப்டேட்: தங்கள் நகரங்களை மீட்க போராடும் உக்ரைன்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!

உக்ரைனுக்கு ஆயுதங்கள் தர மறுத்த ஹிங்கேரி பிரதமர்.

ரஷ்யா உக்ரைன் மீது 31வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இது தொடர்பாக இன்று நடந்த முக்கிய நிகழ்வுகள். இன்று மார்ச் 26 ஆம் தேதி அதிகாலை 1.52 மணி அளவில்  உக்ரைனின் தலைநகர் ஹர்சன் நகரை கைப்பற்றிய ரஷ்யாவிடம் இருந்து மீண்டும் தங்கள் வசம்  கொண்டுவர உக்ரைன் போராடி வருகிறது.

இதனைத் தொடர்ந்து அதிபர் புதின்  ரஷ்யாவுக்கு எதிரான வதந்திகளை பரப்பு பவர்களுக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை  விதிக்கும் சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கினார். இதற்கிடையில் 1.23 மணி அளவில் ரஷ்ய படைகள் உக்ரைனில் ராணுவ கட்டளை மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. அடுத்ததாக 1.18 மணி அளவில் பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ குடும்பத்தினர் மீது ஆஸ்திரேலியா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இந்நிலையில் தற்போது ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு ஆயுதங்கள் தரமுடியாது என்று  ஹிங்கேரி பிரதமர் விக்டர் ஓர்பன் தெரிவித்துள்ளார்.