5 வயது சிறுவன்… கழிவுநீர் தொட்டியில் மரணம்… விளையாட சென்ற பொழுது விபரீதம்

விளையாடி கொண்டிருந்த 5 வயது சிறுவன் கழிவு நீர் தொட்டியில் விழுந்து மரணம். 

ஆவடியில் உள்ள காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் காந்தி இவருக்கு யசோதா என்ற மகளும் சுமுகன் மற்றும்  சுவேகன் என்ற மகன்களும் உள்ளனர். இரண்டு மகன்களும் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் முதலாம் வகுப்பு படித்து வருகின்றனர். நேற்று மாலை வீட்டின் அருகில் விளையாடிக்கொண்டிருந்த சுமுகன் திடீரென காணாமல் போயுள்ளான். எனவே பெற்றோர் தேடி அலைந்தனர். எங்கு தேடியும் கிடைக்காததால் ஆவடி காவல்நிலையத்தில் சிறுவனை காணவில்லை என புகார் அளித்துள்ளனர்.

புகாரின் அடிப்படையில் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா மூலம் சிறுவனைத் தேடி வந்துள்ளனர் காவல்துறையினர். இந்நிலையில் வீட்டின் பின்புறம் இருக்கும் 8 அடி ஆழம் கொண்ட கழிவுநீர் தொட்டியில் சிறுவனின் உடல் மிதப்பதை கண்டு பெற்றோர் கதறி அழுதனர். பின்னர் கழிவுநீர் தொட்டியில்   உள்ள நீர் அகற்றப்பட்டு சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் காவல்துறையினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *