2019ம் ஆண்டுக்கான உலகின் அதிக சம்பளம் வாங்கும் 10 நடிகர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது.
ஃபோர்ப்ஸ் நாளிதழ் ஆண்டுதோறும் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் வெளியிட்டு வருகிறது. அதன்படி கடந்த ஆண்டு 2018 -ஜூன் 1 முதல் இந்த ஆண்டு 2019- ஜூன் 1 வரையா உலகின் அதிக சம்பளம் வாங்கும் 10 நடிகர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது.

அதில் பாலிவுட் நடிகரும் தமிழில் 2.o திரைப்படத்தின் வில்லனாக நடித்தவருமான அக்ஷய் குமார் ஜூன் 2018 இல் 65 மில்லியன் அமெரிக்க டாலர் (தோராயமாக ரூ. 466 கோடி) சம்பாதித்து 4-வது இடத்தைப் பிடித்துள்ளார். மிஷன் மங்கல் திரைப்படம் வெற்றியைக் கருத்தில் கொண்டு, ஃபோர்ப்ஸ் பட்டியலில் உலகின் அதிக சம்பளம் வாங்கும் 10 நடிகர்களின் பட்டியலில் இடம்பெற்ற ஒரே பாலிவுட் நடிகர் அக்சய் குமார் மட்டும் தான்.
இந்த பட்டியலில் ஹாலிவுட் நடிகர் டுவைன் ஜான்சன் ‘தி ராக்’ முதலிடத்தில் உள்ளார். இந்த காலகட்டத்தில் 89.4 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ. 640 கோடி) சம்பாதித்தார் என்று ஃபோர்ப்ஸ் அறிக்கை தெரிவித்துள்ளது. அந்த பட்டியலின் படி, உலகின் அதிக சம்பளம் வாங்கும் 2-வது நடிகர் ஆஸ்திரேலிய நடிகர் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், மார்வெலின் சூப்பர் ஹீரோ பிரபஞ்சத்தைச் சேர்ந்த பல நடிகர்களில் ஒருவரான கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்தின் வருவாய் ஜூன் 2018 முதல் ஜூன் 2019 வரை 76.4 மில்லியன் அமெரிக்க டாலர் (தோராயமாக ரூ. 547 கோடி) ஆகும்.
அயர்ன் மேன் படத்தில் நடித்த ராபர்ட் டவுனி ஜூனியர் ஜூன் 2018 மற்றும் ஜூன் 2019 இல் 66 மில்லியன் அமெரிக்க டாலர் (தோராயமாக ரூ. 473 கோடி) வருவாயுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். ஜாக்கி சான் 58 மில்லியன் அமெரிக்க டாலர் (தோராயமாக ரூ .415 கோடி) சம்பாதித்த அக்சய் குமாருக்கு அடுத்த படியாக 5- வது இடத்தில் உள்ளார்.
ஆறாவது இடத்தை பிராட்லி கூப்பர் மற்றும் ஆடம் சாண்ட்லர் இணைந்து 57 மில்லியன் அமெரிக்க டாலர்களுடன் (தோராயமாக ரூ .408 கோடி) சம்பளத்துடன் உள்ளனர். கிறிஸ் எவன்ஸ் 43.5 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ. 311 கோடி) சம்பாதித்து 8-வது இடத்தில் இடம்பெற்றார். 9- வது மற்றும் 10-வது இடங்களை பால் ரூட் 41 மில்லியன் அமெரிக்க டாலர்களுடன் (தோராயமாக ரூ. 293 கோடி), வில் ஸ்மித் 35 மில்லியன் அமெரிக்க டாலர்களுடன் (சுமார் 250 கோடி) சம்பாதித்துள்ளனர்.
2019 – ஆம் ஆண்டின் உலகின் அதிக சம்பளம் வாங்கும் 10 நடிகர்களின் பட்டியல் :
டுவைன் ஜான்சன் – அமெரிக்க டாலர் 89.4 மில்லியன் (தோராயமாக ரூ .640 கோடி)
கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் – அமெரிக்க டாலர் 76.4 மில்லியன் (தோராயமாக ரூ. 547 கோடி)
ராபர்ட் டவுனி ஜூனியர் – அமெரிக்க டாலர் 66 மில்லியன் (தோராயமாக ரூ. 473 கோடி)
அக்ஷய் குமார் – அமெரிக்க டாலர் 65 மில்லியன் (தோராயமாக ரூ. 466 கோடி)
ஜாக்கி சான் – அமெரிக்க டாலர் 58 மில்லியன் (தோராயமாக ரூ .415 கோடி)
பிராட்லி கூப்பர் – அமெரிக்க டாலர் 57 மில்லியன் (தோராயமாக ரூ .408 கோடி)
ஆடம் சாண்ட்லர் – அமெரிக்க டாலர் 57 மில்லியன் (தோராயமாக ரூ .408 கோடி)
கிறிஸ் எவன்ஸ் – அமெரிக்க டாலர் 43.5 மில்லியன் (தோராயமாக ரூ. 311 கோடி)
பால் ரூட் – அமெரிக்க டாலர் 41 மில்லியன் (தோராயமாக ரூ .293 கோடி)
வில் ஸ்மித் – 35 மில்லியன் அமெரிக்க டாலர் (தோராயமாக 250 கோடி)