“சிங்கத்துக்கு ரொம்ப பசி”… மாட்டிக்கொண்ட ஆராய்ச்சியாளர்… பின்னர் நடந்த திக்திக் நிமிடங்கள்..!!

சிங்கத்திடம் மாட்டிக் கொண்ட அமெரிக்க ஆராய்ச்சியாளர் ஒருவர் அதனிடம் சண்டையிட்டு தப்பி வந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சிங்கம் என்ற பெயர் கேட்டாலே சற்று நடுக்கம்தான் ஏற்படும். ஆனால் ஆப்பிரிக்காவில் வனவிலங்கு ஆராய்ச்சியாளராக இருக்கும் கோட்ஸ் நீஃப் என்ற நபர் சிங்கத்திடம் மாட்டிக் கொண்டு அதனுடன் சண்டையிட்டு தப்பி வந்துள்ளார். டிசம்பர் ஏழாம் தேதி போட்ஸ்வானாவின் ஒகாவாங்கோ டெல்டாவில் ஆராய்ச்சியில் தனது கூடத்தில் தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென தனது கூடத்திற்கு வெளியே ஒரு சத்தம் கேட்டது. அங்கு ஒரு சிங்கம் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பசியால் இருந்த சிங்கத்திடம் இருந்து தப்ப முயன்றபோது சிங்கத்தை குத்தி தாக்கியுள்ளார்.

இதனால் சிங்கம் கோபமடைந்து அவரை தாக்கியது. இதில் அருகில் தூங்கிக் கொண்டிருந்த சக ஆராய்ச்சியாளரான டாக்டர் ரெய்னர் வான் பிராண்டிஸ், யானையின் சாணத்தையும் கிளைகளின் சிங்கத்தின் மீது வீசினார். மேலும் சிங்கத்தை எதிர்த்து போராட்டம் நடத்தினார்கள். அதே நேரத்தில் ஹெட் ரேஞ்சர் டொமலெட்ஸ் செடபோஷா ஒரு ஃபிளாஷ்-பேங்கை வீசினார். பல போராட்டங்களுக்கு பிறகு அவரது நண்பர்கள் நீப் காப்பாற்றினர். பல ஆழமான காயங்கள் உயிர் தப்பினார். தற்போது மருத்துவ சிகிச்சையால் குணமாகி வருகிறார்.