இன்றைய காலகட்டத்தில் ரீல்ஸ் மோகத்தால் இளைஞர்கள் விபரீதமான செயல்களில் ஈடுபட்டு பிரச்சினைகளில் சிக்குகிறார்கள். குறிப்பாக சமூக வலைதளத்தில் புகழ்பெற வேண்டும் என்பதற்காக ஆபத்தான ரீல்ஸ் வீடியோக்களை எடுக்கிறார்கள். இதன் காரணமாக சில நேரங்களில் உயிரே போகும் அசபாவிதம் கூட நடந்து வருகிறது. அந்த வகையில் தற்போது சில மாணவர்கள் ஒரு கருப்பு நிற வாகனத்தில் கருப்பு நிற உடை அணிந்து அதன் மேல் அமர்ந்தவாறு பயணம் செய்து ரீல்ஸ் வீடியோ எடுக்கிறார்கள்.

அவர்கள் வாகனத்தின் மீது கெத்தாக அமர்ந்த நிலையில் திடீரென அவர்கள் கீழே விழுந்து விட்டனர். இதில் மாணவர்கள் மூவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் இது போன்ற விபரீதமான செயல்களில் யாரும் ஈடுபடக் கூடாது என்ற நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.