”என்னைப்போலவே அவர் ஒரு சினிமா நேசர்”…. இசை வெளியீட்டு விழாவில் கமல் புகழாரம்…..!!!!

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் தமிழ் மட்டுமல்லாமல் இந்தி மற்றும் தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் கமல் நடிப்பில் வெளியான’ விக்ரம்’ படத்தில் இவரின் மிரட்டலான வில்லன் வேடம் ரசிகர்கள் மத்தயில் நல்ல வரவேற்பு பெற்றது.

கமல் - விஜய்

தற்போது இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் இவர் புதிய படம் ஒன்றில் நடித்துள்ளார். ‘டிஎஸ்பி’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் இவர் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அப்போது பேசிய கமல், ”என்னை போலவே விஜய் சேதுபதி சினிமா நேசர். இன்று விஜய் சேதுபதி என் காலில் விழுந்தார். நாளை அவர் காலில் விழ வேறொரு கலைஞர் வருவான்” என கூறினார். இவரின் இந்த பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது.