இப்படி இருந்தால்தான் அவர்கள் “திருநங்கைகள்”… புராணம் கூறும் உண்மைகள்..!!

திருநங்கைகள் குறித்து இதுவரை வெளிவராத புராணக்கதைகள் மற்றும் உண்மைகள் பற்றி இதில் தெரிந்து கொள்வோம்.

ஒருவர் நாம் செய்யும் செயல் மற்றும் அவர் நடத்தையை வைத்து இவர்கள் இப்படி தான் என்று நம்மால் எளிதில் அடையாளம் கண்டு கொள்ள முடியும். குறிப்பாக கிராமத்தில் இருக்கும் மக்கள் மற்றவர்களை விட எளிதில் அடையாளம் கண்டு கொள்வார்கள். கடவுளே அர்த்தநாரீஸ்வரர் உருவத்தில் இருப்பதாக புராணங்கள் கூறுகிறது. சிவபெருமானும் பார்வதியும் இணைந்து ஒரு உருவமாக தான் அர்த்தநாரீஸ்வரர் இருக்கிறார். இன்று திருநங்கைகளாக இருக்கும் இவர்கள் அர்த்தநாதிஸ்வரரின் மறு உருவம் என்று நம்பப்படுகிறது.

இவர்களிடமிருந்து நாம் வாங்கும் ஆசீர்வாதம் ஒரு நல்ல அதிர்ஷ்டத்தைக் கொடுப்பதாக சாஸ்திரங்கள் கூறுகிறது. ஆசீர்வாதம் கொடுக்கும் திருநங்கைகள், எளிதில் சாபத்தையும் கொடுத்துவிடுவார்கள். ஆசிர்வாதம் எப்படி பலிக்கிறது. அதேபோல் சாபமும் பலித்துவிடும். இவர்கள் நம்மிடம் கேட்பது ஒன்றே ஒன்றுதான் பணம். நாம் பேருந்து நிலையத்தில், ரயில் நிலையத்தில் இருக்கும் போது அவர்கள் நம்மிடம் வந்து பணம் கேட்பார்கள். அவர்களுக்கு பணத்தை கொடுத்து விடுவோம். அவர்கள் நமக்கு ஆசிர்வாதம் வழங்குவார்கள்.

நாம் அவர்களிடமிருந்து ஒரு ஒரு ரூபாய் வாங்கினால் அது நம்மளை கோடீஸ்வரனாக கூட மாற்றி விடும். ஆனால் அவர்களிடமிருந்து பொருள் வாங்குவது என்பது மிகவும் கடினமான ஒன்று. அப்படி நீங்கள் பணம் வாங்கி விட்டால் அல்லது அவர்களாகவே கொடுத்து விட்டால் நீங்கள் அதிர்ஷ்டக்காரர் தான். அதுபோல் குழந்தை இல்லாதவர்கள் குழந்தை பாக்கியம் பெற பொம்மை ஒன்றை வாங்கிக்கொள்ளுங்கள். திருநங்கையிடம் பொம்மையை கொடுத்தால் அவர்கள் அதனை ஏற்க ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். பணத்தை தவிர நம்மிடம் எதுவுமே வாங்க மாட்டார்கள்.

ஆனால் பொம்மையுடன் சேர்த்து பணத்தை கொடுத்து விடுங்கள். அவர்கள் பொம்மையை வாங்கி விட்டால் உங்களுக்கு குழந்தை பாக்கியம் விரைவில் உண்டாகும் என்று கூறப்படுகிறது. அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும் புத பகவான் திருநங்கைகளுக்கு அருள்புரிவதாக புராணங்கள் கூறுகின்றன. புத பகவானின் அருள் பெற்ற திருநங்கைகளுக்கு இவ்வாறு கொடுப்பது பரிகாரமாக சொல்லப்படுகின்றது. அதேபோல் உங்கள் வாழ்க்கையில் இருக்கும் எதிரிகளை நண்பர்களாக மாற்ற விருப்பமுள்ளவர்கள் ஒரு வெள்ளை பேப்பரில் உங்களுடைய எதிரியின் முழு பெயரை எழுதி அதை மடித்து சுருட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

பிறகு ஒரு கருப்பு அருணகயிறு வாங்கி அதனை சிறிதாக வெட்டி அந்த பேப்பரில் அதை கட்டி பணத்துடன் அதை வைத்து கொடுத்தால் போதும், அவர்கள் அதனை வாங்கி விட்டால் சிறிது காலத்திலேயே எப்பேர்பட்ட எதிரிகளாக இருந்தாலும் அவர்கள் உங்கள் நண்பர்களாக மாறிவிடுவார்கள். இதன் மூலம் பகை நீங்கி நிம்மதி உண்டாகும் என்பதும் புராணகாலத்தில் கூறப்பட்ட ஒரு ஐதீகம். ஆனால் திருநங்கைகள் நம்மிடம் பணம் கேட்பது தவிர வேறு எதையும் செய்ய மாட்டார்கள், பணத்தைத் தவிர வேறு எதையும் வாங்கவும் மாட்டார்கள் என்பதுதான் நிதர்சனமான உண்மை.