எடையை சட்டுன்னு குறைக்க உதவும்… திணை, முருங்கை கீரையில் ருசியான… இந்த ரெசிபிய செய்து அசத்துங்க..!!

திணை முருங்கைக்கீரை சப்பாத்தி செய்ய தேவையான பொருட்கள் :

திணை மாவு                   – 2 கப்
முருங்கைக்கீரை         – 1 கட்டு
மிளகுத்தூள்                    – 1/2 ஸ்பூன்
எண்ணெய்                       – தேவையான அளவு
உப்பு                                    – தேவையான அளவு

செய்முறை:

முதலில் முருங்கைக்கீரையை எடுத்து இலைகளை மட்டும் ஆய்ந்து எடுத்து சுத்தம் செய்து கொள்ளவும்.  பின்பு  பாத்திரத்தில் திணை மாவு, உப்பு, மிளகுத்தூள், ஆய்ந்த முருங்கைக் கீரையை போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, சப்பாத்தி மாவு பதத்தில், நன்கு கெட்டியாக பிசைந்தும், அரை  நிமிடம் அப்படியே வைக்கவும்.

பின்னர் பிசைந்த மாவை எடுத்து, சிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்தி போன்று வட்டமாக  தேய்த்து எடுத்து கொள்ளவும்.

மேலும் அடுப்பில் தோசைக்கல்லை வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் தேய்த்து வைத்துள்ள சப்பாத்தியை போட்டு, நன்கு வேக வைத்து, திருப்பி போட்டு, சிறிது எண்ணெய் ஊற்றி, இரண்டு பக்கமும் வேக வைத்து எடுத்தால், திணை முருங்கைக்கீரை சப்பாத்தி ரெடி.