உருளைக்கிழங்கில்…அதிக சத்தான… சீஸ் பாலக் ரொட்டி ரெஸிபி…!1

பெரிய உருளைக்கிழங்கு           – 2
பாலக்கீரை                                        – 1 கப்
கோதுமை மாவு                              – 3 கப்
துருவிய சீஸ்                                   – 1/4 கப்
உப்பு                                                       – தேவையான அளவு
தயிர்                                                      – 3 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள்                                      – 1/4 டீஸ்பூன்
சீரகத் தூள்                                          – 1/4 டீஸ்பூன்
நறுக்கிய பச்சைமிளகாய்            – 1
கொத்தமல்லித்தழை                    – 1/2 டீஸ்பூன்
எண்ணெய்                                          – 3 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

முதலில் அடுப்பில் பாத்திரத்தை வைத்து, அதில் உருளைக்கிழங்கை போட்டு, தண்ணீர் ஊற்றி வேக வைத்து, தோல் உரித்து, நன்கு மசித்து எடுத்து கொள்ளவும். அதே வாணலியில் பாலக்கீரையை போட்டு தண்ணீர் ஊற்றி வேக வைத்து எடுத்து, மிக்சிஜாரில் போட்டு அரைத்து கொள்ளவும்.

மேலும் கோதுமை மாவு, அரைத்த பாலக்கீரை விழுது, உப்பு, மஞ்சள் தூள், சீரகத் தூள், தயிர், சிறிது எண்ணெய் ஊற்றி மிருதுவான சப்பாத்தி மாவாக பிசைந்து வைக்கவும். பிசைந்த மாவை சிறு  உருண்டைகளாக உருட்டி, வட்டமான தேய்த்து எடுத்து வைக்கவும். பின்பு சீஸை துருவி எடுத்து கொள்ளவும்.

பின்பு வேகவைத்த உருளைக்கிழங்குடன், உப்பு, பச்சைமிளகாய், மல்லித்தழை, துருவிய சீஸ்  சேர்த்து கலந்து, தேய்த்த  சப்பாத்தியின் மேல் சிறிதளவு கலந்த கலவையை நடுவில் வைக்கவும்.

அதன் பின்பு கலவையை நடுவில் வைத்த சப்பாத்தியில், சுற்றி இருக்கும் தேய்த்த மாவை  மூடும் அளவிற்கு கொண்டு வந்து முடி வைத்து, உருண்டையாக உருட்டி, நன்கு சப்பாத்திகளாக தேய்த்து எடுக்கவும்.

அதனை அடுத்து தோசை கல்லை வைத்து, சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்ததும் தேய்த்த சப்பாத்திகளை போட்டு, இரண்டு பக்கமும் வெந்தவுடன் எடுத்து, பரிமாறினால் சுவையான உருளைக்கிழங்கு சீஸ் பாலக் ரொட்டி ரெடி. குருமாவுடன் வைத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *