வெளியில போயிட்டு வருவதால… உங்க சருமம் வறண்டு… பொலிவில்லாமல் இருக்கா ? அப்போ… இந்த ஜூஸ்ஸ அடிக்கடி குடிங்க… போதும்..!!

தர்பூசணி – ஸ்ட்ராபெர்ரி ஜூஸ் செய்ய தேவையான பொருள்கள்: 

முதலில் தர்பூசணியை எடுத்து தோல் மற்றும் விதைகளை  நீக்கியபின், ஸ்ட்ராபெர்ரி பழத்தையும் துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளவும்.

பின்னர் அடுப்பில் கடாயை வைத்து, அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி, பாதியளவு சர்க்கரையை போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கி கொள்ளவும்.

பின்பு மிக்சிஜாரில் நறுக்கிய தர்பூசணி பழம், ஸ்ட்ராபெர்ரி பழத் துண்டுகள், எலுமிச்சைச் சாறு, கொதித்த சர்க்கரை சிரப்பை சேர்த்து நன்கு மையாக அரைத்து கொள்ளவும்.

மேலும் அரைத்த கலவையை கண்ணடி கிளாசில் ஊற்றியபின், தேவையான அளவு ஐஸ்கட்டிகளை போட்டு, சில நறுக்கிய தர்பூசணித் துண்டுகளை தூவி அலங்கரித்து பரிமாறினால் ருசியான தர்பூசணி, ஸ்ட்ராபெர்ரி ஜூஸ் ரெடி.