அசத்தலான சுவையில்…சேமியா,  கேரட்டில்…  பிரெட் ரோல் ரெஸிபி…!!

சேமியா                               – 1 கப்
மிளகாய் தூள்                   – 1 டீஸ்பூன்
தனியா தூள்                      – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள்                     – 1/2 டீஸ்பூன்
மிளகுத் தூள்                    – 1/2 டீஸ்பூன்
பிரெட்                                  – 4 ஸ்லைஸ்
மைதா                                 – 1 கப்
ரவை                                    – 1/2 டீஸ்பூன்
கேரட் துருவல்                – 1/2 கப்
எண்ணெய்                        – தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் பிரெட்டை துண்டுகளை எடுத்து தூளாக்கிக் கொள்ளவும். பின்பு அடுப்பில் கடாயை வைத்து அதில் சேமியாவை போட்டு  தண்ணீரில் ஊற்றி, 3 நிமிடம் நன்கு  கொதிக்க விட்டு வெந்ததும்  சேமியாவை வடிகட்டியதும், எண்ணெய் ஊற்றி உதிர்த்துக் கொள்ளவும்.

மேலும் அடுப்பில் கடாயை வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கேரட்டை வதக்கி, உதிர்த்த சேமியாவை போட்டு, அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியா தூள், மிளகுத் தூள் சேர்த்து, தூளாக்கிய  பிரெட்டையும் சேர்த்து நன்கு கிளறியவுடன்சிறிது  ஆற வைக்கவும்.

பின்பு ஒரு பாத்திரத்தில் மைதாவையும், ரவையையும் கலந்து, அதில் சிறிது தண்ணீர் ஊற்றி, மாவு போல் பிசைந்து உருண்டைகளாக்கி அதன் நடுவில் சேமியா கலவையை வைத்து, அதை நன்கு மூடி ரோல் மாதிரி செய்து கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து, பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் ரோல் செய்து வைத்த கலவையை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறினால், சுவையான சேமியா கேரட் பிரெட்ரோல் ரெடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *