எல்லா சாதத்துக்கும் ஏற்ற… அதிக சத்துக்கள் நிறைந்த… அருமையான சைடிஸ்..!!

உருளைக்கிழங்கு பீன்ஸ் பொரியல் செய்ய தேவையான பொருள்கள்:

உருளைக்கிழங்கு        – 6
பீன்ஸ்                                – 10
பச்சை மிளகாய்            – 2
மஞ்சள் தூள்                   – 1 டீஸ்பூன்
மல்லி தூள்                     – 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள்                – 1 டீஸ்பூன்
சீரகம்                                 – 1 டீஸ்பூன்
உப்பு                                   – தேவையான அளவு
எண்ணெய்                      – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில்உருளைக்கிழங்கை எடுத்து தோல் உரித்து, நறுக்கி கொள்ளவும். பின்பு பீன்ஸ், பச்சை மிளகாயை சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளவும். பின்பு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகத்தைப் போட்டு தாளிக்கவும்.

பின்னர் அதனுடன்  நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து 2 நிமிடம் வதக்கியபின், பீன்ஸ், பச்சை மிளகாய் சேர்த்து கிளறி விடவும்.  பின்னர் அதனுடன் சிறிது உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து,  கிளறி நன்கு வேகும் வரை  மூடி வைக்கவும்.

அதற்கு பின்பு வேக வைத்த கலவையானது நன்கு வெந்ததும், அதில் மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து கிளறி, பச்சை வாசனை போனதும் இறக்கி பறிமாறினால் ருசியான உருளைக்கிழங்கு பீன்ஸ் பொரியல் தயார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *