இந்த அருமையான கிரேவியானது… குழந்தைகளுக்கு மட்டுமல்ல… அனைவரும் விரும்பி சாப்பிடு வாங்க..!!

பன்னீர் கிரேவி செய்ய தேவையான பொருட்கள்:

பன்னீர்                                    – 250 கிராம்
வெங்காயம்                         – 2
மிளகாய் வற்றல்              – 2
பச்சை மிளகாய்                 – 2
இஞ்சி, பூண்டு விழுது     – 1 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சை சாறு                – 2 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள்                    – 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள்                          – 1 டீஸ்பூன்
கடுகு                                         – கால் டீஸ்பூன்,
வெந்தயம்                              – கால் டீஸ்பூன்,
கறிவேப்பிலை                    – சிறிதளவு,
நெய்                                          – 1 டேபிள்ஸ்பூன்,
எள்                                             – 1 டீஸ்பூன்,
எண்ணெய்                             – 1 டேபிள்ஸ்பூன்,
உப்பு                                           – தேவையான அளவு.

அரைக்க:
வேர்க்கடலை                      – தேவையான அளவு
தேங்காய்                               – சிறிய துண்டு
தயிர்                                         – 2 டேபிள்ஸ்பூன்,
தனியா                                    – ஒரு டீஸ்பூன்
வெந்தயம்                             – 1 டீஸ்பூன்,
பட்டை                                    – சிறிய துண்டு,
கிராம்பு, ஏலக்காய்            – 6

செய்முறை:

முதலில் மிக்சிஜாரில் வேர்க்கடலை, தயிர், தனியா, வெந்தயம், பட்டை, கிராம்பு, ஏலக்காயை போட்டு நன்கு மையாக அரைத்து கொள்ளவும். பின்பு பச்சை மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பிறகு பன்னீரை சதுர துண்டுகளாக வெட்டி எடுத்து கொள்ளவும். அதன் பின்பு இஞ்சி, பூண்டை தோல் நீக்கியபின் துண்டுகளாக நறுக்கியதும் மிக்சிஜாரில் போட்டு நன்கு மையாக அரைத்து கொள்ளவும்.

பின்னர் வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும், கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை போட்டு தாளித்ததும், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், மிளகாய் வற்றல் சேர்த்து,  வேகும் வரை நன்கு வதக்கவும்.

மேலும் அதில் வெங்காயம் நன்கு வதங்கியபின்,  அரைத்த இஞ்சி பூண்டு விழுது, அரைத்த வேர்க்கடலை மசாலா, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கியதும் சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும்

பின்பு கலவையானது நன்கு கொதித்ததும், அதில் எலுமிச்சை சாறு சேர்ததும், நறுக்கிய பன்னீரை துண்டுகளை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து கொள்ளவும்.

மேலும் அடுப்பில் கடாயை வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், எள்ளை போட்டு தாளித்து, அதை கொதிக்கின்ற கலவையில் கொட்டியபின்,  சிறிது கிளறி இறக்கிப் பரிமாறினால் சுவையான பன்னீர் கிரேவி ரெடி.