அதிக சத்துக்கள் நிறைந்த மீனில்… இதய நோய், சளி, இருமலிலிருந்து முற்றிலும் விடுபடணுமா ? அப்போ… இந்த ரெசிபிய செய்து சாப்பிடுங்க..!!

மீன் மிளகு மசாலா செய்ய தேவையான பொருட்கள்:

துண்டு மீன்                       – அரை கிலோ
வெங்காயம்                      – 2௦௦ கிராம்
பச்சை மிளகாய்              – 4
இஞ்சி, பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
சீரகம்                                   – ஒரு டீஸ்பூன்
மிளகு தூள்                       – 5 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய்          – 5
கொத்தமல்லி இலை – ஒரு கப்
மஞ்சள் தூள்                   – கால் டீஸ்பூன்
உப்பு                                    – தேவைகேற்ப
எண்ணெய்                      – தேவைகேற்ப
கறிவேப்பிலை             – சிறிதளவு

செய்முறை:

முதலில் வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். பின்பு இஞ்சி, பூண்டுகளை  எடுத்து சுத்தம் செய்து,துண்டுகளாக நறுக்கியதும், அதை மிக்சிஜாரில் போட்டு பேஸ்டாக அரைத்து எடுத்து கொள்ளவும்.

பின்பு மீனை ஒரு பாத்திரத்தில் எடுத்து, அதன் மேல் உள்ள செல்களை நீக்கியபின்,  துண்டுகளாக வெட்டியதும், தண்ணீரால் சுத்தம் செய்து கொள்ளவும்.

அடுப்பில் கடாயை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், கறிவேப்பில்லை, காய்ந்த மிளகாய் போட்டு தாளித்ததும், அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

மேலும் அதில் வெங்காயம் நன்றாக வதங்கியதும், அதனுடன் இஞ்சி, பூண்டு பேஸ்ட் விழுது, மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.

பின்னர் கிளறி விட்ட கலவையானது நன்கு வதங்கியதும், அதில் நறுக்கிய மீன் துண்டுகளை சேர்த்து, மீன்துன்டுகள் உடைந்து விடாமல், நன்கு வேகும் வரை கிளறியாப்பின், அதை லேசாக புரட்டி விட்டதும், மூடி வைத்து வேக விடவும்.

இறுதியில் வேக வைத்த மீன்கலவையானது நன்கு வெந்ததும், அதில்  மிளகு துளை சேர்த்து சிறிது கிளறியபின், கொத்தமல்லி இலையை தூவியபின் இறக்கி பரிமாறினால் ருசியான மீன் மிளகு மசாலா ரெடி.