நீரிழிவு நோயை டக்குன்னு குறைக்க உதவும் எள்ளில்… புதுவகையான ரெசிபி செய்யலாம்..!!

எள் சாதம் செய்ய தேவையான பொருள்கள்:

பச்சரிசி                      – 1 கப்
எள்                               – 100 கிராம்
காய்ந்த மிளகாய்  – 6
உப்பு                            – தேவையான அளவு

தாளிக்க :

நல்லெண்ணெய்  – ஒரு தேக்கரண்டி
கடுகு                          – அரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு  – கால் தேக்கரண்டி
கடலைப் பருப்பு   – சிறிதளவு
நிலக்கடலை         – சிறிதளவு
பெருங்காயம்        – கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை     – ஒரு கொத்து

செய்முறை:

முதலில் பச்சரிசியை ஒரு பாத்திரத்தில் எடுத்து தண்ணீரால் சுத்தம் செய்து கொள்ளவும். பின்பு அடுப்பில் பாத்திரத்தை வைத்து, அதில் பச்சரிசியை போட்டு நன்கு வேக வைத்து உதிரியாக வெந்ததும் இறக்கியபின், அதில் உள்ள தண்ணீரை வடித்து, ஆற வைத்து கொள்ளவும்.

பிறகு அகலமான கடாயை வைத்து, சூடானதும், அதில் எண்ணெய் ஊற்றாமல், வெறும் எள்ளை மட்டும் போட்டு சடசட வென்று பொரியும் வரை நன்கு வறுத்து எடுத்து கொள்ளவும்.

மேலும் அதே கடாயை அடுப்பில் வைத்து, அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,காய்ந்த மிளகாயை போட்டு நன்கு வறுத்து எடுத்து கொள்ளவும்.

மிக்சிஜாரில் வறுத்த எள்ளை போட்டு,  வறுத்து வைத்த காய்ந்த மிளகாய், சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு  மையாக அரைத்து எடுத்து கொள்ளவும்.

பின்னர்  அடுப்பில் வாணலியை வைத்து, அதில் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, நிலக்கடலை, பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளித்ததும், அதனுடன் அரைத்த எள் கலவையை போட்டு நன்கு வதக்கி கொள்ளவும்.

இறுதியில் உதிரியாக வடித்து வைத்த சாதத்தைதில், வதக்கிய கலவையை போட்டு, ருசிக்கேற்ப உப்பு தூவி,  நன்கு கரண்டியால் சாதத்தில் முழுவதும் படும்படி விரவி விட்டபின், முடி வைத்து சில நிமிடம் கழித்து பரிமாறினால் ருசியான எள் சாதம் ரெடி.

குறிப்பு :

காய்ந்த மிளகாய்க்குப் பதிலாக மிளகு தூளை பயன்படுத்தலாம். மேலும் எண்ணெய்க்கு பயன்படுத்துவதற்கு பதிலாக நெய்யும் உபயோகித்து கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *