கேரட் ரசம் செய்ய தேவையான பொருட்கள்:
கேரட் – ஒரு கப் (துருவியது)
பச்சை மிளகாய் – 2
தக்காளி – 2
ரசம் பவுடர் – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
கடுகு – அரை டீஸ்பூன்
மிளகு, சீரகம் – அரை ஸ்பூன்
தக்காளி – 2
கறிவேப்பிலை – ஒரு கொத்து
பூண்டு – 8 பல்
காய்ந்த மிளகாய் – 2
கொத்தமல்லி இலை – ஒரு பிடி
பெருங்காயம் – கால் ஸ்பூன்
கல் உப்பு – 2 ஸ்பூன்
எண்ணெய் – 2ஸ்பூன்
செய்முறை:
முதல்ல பூண்டு, மிளகு, சீரகம் மூன்றையும் மிக்சிஜாரில போட்டு, தண்ணீர் சேர்க்காமல், மையாக அரைத்து எடுத்து கொள்ளவும். பிறகு கேரட்டை பூவாக துருவினதும், மிளகாய், தக்காளியை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பின்னர் மிக்சிஜரில்ல துருவிய கேரட்டையும், நறுக்கிய மிளகாய், தக்காளிய போட்டு மையாக அரைச்சி எடுத்துக்கணும்.
பின்னர் அடுப்புல கடாயை வச்சி, எண்ணெய் ஊற்றி சூடேறியதும், கடுகு நல்லா பொரிஞ்சதும், காய்ந்த மிளகாய், கருவேப்பிலைய போட்டு தாளித்ததும், அரைச்சி வச்ச மிளகு கலவையை போட்டு நல்லா வதக்கியதும், அதில் அரைச்சி வச்ச கேரட் கலவையை ஊற்றினதும்,மஞ்சள் தூள், ரசம் பவுடர்,ருசிக்கேற்ப கல் உப்பு,பெருங்காயத்தை சேர்த்து நல்லா கலந்துவிடவும்.
இறுதியில் கலந்து விட்ட கலவையில் கொத்தமல்லி இலையை தூவியதும், அடுப்பை குறைந்த தீயில் வைத்து சில நிமிடம் நல்லா கொதித்ததும், இறக்கி வைத்து சூடாக சாதத்துடன் பரிமாறினால் ருசியான கேரட் ரசம் ரெடி.