வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்த அன்னாசி பழத்தில்… அதிரடியான ருசியில்… சுவையான ரெசிபி செய்து அசத்தலாம்..!!

அன்னாசி பச்சடி செய்ய தேவையான பொருள்கள்:

அன்னாசி                         – 2 கப்
மஞ்சள் தூள்                   – 1 தேக்கரண்டி
மிளகாய்த்தூள்              – 1 தேக்கரண்டி
உப்பு                                    – சிறிது
சர்க்கரை                           – 2 தேக்கரண்டி
தயிர்                                    – 1 கப்
தேங்காய்                          – ½ கப்
சீரகம்                                  – 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய்             – 1
எண்ணெய்                        – 1 டேபிள் ஸ்பூன்
கடுகு                                    – 1 தேக்கரண்டி
சீரகம்                                   – 1 தேக்கரண்டி
பெருங்காயம்                  – ¼ தேக்கரண்டி
கறிவேப்பிலை               – சிறிது

செய்முறை:

முதலில் அண்ணாச்சி பழம், தேங்காய், பச்சை மிளகாயை சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளவும். பின்பு மிக்சிஜாரில் நறுக்கிய தேங்காய், சீரகம், பச்சை மிளகாய் போட்டு சிறிது  தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து எடுத்து கொள்ளவும். அதன் பின்பு அதே மிக்சிஜாரில் அன்னாசிபழ துண்டுகளை போட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

பிறகு அடுப்பில் கடாயை வைத்து, அதில் அரைத்த அன்னாசிபழ கலவை, அரைத்த தேங்காய் கலவை. மஞ்சள் தூள், மிளகாய்த்தூள்,சிறிது உப்பு, சர்க்கரை சேர்த்து, நன்கு கிளறி, சில நிமிடம் மூடி வைத்து  நன்கு கொதிக்க வைக்கவும்.பின்னர் கொதிக்க வைத்த கலவையை இறக்கி,அதில் தயிரை சேர்க்கவும்.

இறுதியில் அடுப்பில் வாணலியை வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து கொதிக்க வைத்த கலவையில் ஊற்றி நன்கு கலந்து பரிமாறினால் சுவையான அண்ணாச்சி பச்சடி ரெடி.