டயட் இருக்காமலேயே… ரொம்ப சட்டுன்னு weight loss பண்ணனுமா ? அப்போ… இந்த இயற்கையான முறையில… சிம்பிளான சில டிப்ஸ்..!!

இயற்கையான உணவுகளை சாப்பிட்டு எவ்வாறு உடல் எடையை குறைக்கலாம் என்பதை பற்றி இதில் காணலாம்:

இன்று அதிகமானோர்  பாதிக்கப்படும் பிரச்சனைகளில் உடல் எடை பிரச்சனையும் ஒரு அவதியாக் கருதப்படுகிறது. இந்த பிரச்சனைகளில் இருந்து  நாம் விடு படுவதற்கு உடனடியாக மருத்துவர்களை  தான் நாடுகிறோம். ஆனால், நாம் இயற்கையான முறையில் உடல்  பருமனை குறைத்தல் ஆரோக்கியமாகவும், பக்க விளைவுகள் இல்லாமலும் இருக்கின்றது.

இயற்கையான உணவுகளை சாப்பிட்டு எப்படி  உடல் எடையை குறைக்கலாம் என்ற செய்தி இந்த செய்தி  தொகுப்பில் பார்க்கலாம்:

சோம்பு தண்ணீர் :

சோம்பு தண்ணீர் உடல் எடையை குறைப்பதில் அதிக  பங்கிணை வகுக்கிறது. வெயில் நேரங்களில் அதிகளவு தாகமாக இருக்கும் போதெல்லாம், சாதாரண தண்ணீரில், சோம்பு கலந்த நீரைக் குடித்து வந்தால், உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்கள் குறைந்து இதன் மூலம் உடல் எடையை குறைக்கலாம்.

சுரைக்காய் :

சுரைக்காய் நமது வீட்டில் சமையல்களில் பயன்பத்தும்  காய்கறி வகைகளில் ஒன்று. சுரைக்காயில் உடலில் உள்ள எடையை குறைக்கும் ஆற்றல் உள்ளது. வயிற்றில் சேர்ந்துள்ள கொழுப்பைக் கரைப்பதில் சுரைக்காய் பெரும்பங்காற்றுகின்றது . உடல் பருமன் உடையவர்கள்  வாரம் ஒருமுறை சுரைக்காயை உட்கொண்டு வந்தால், உடல் எடையை குறைக்க முடியும்.

பப்பாளி காய் :

பப்பாளி நாம் அனைவருக்கும் அறிந்த ஒரு பலவகை . பப்பாளி காய்களில் அதிகளவு உடல் எடையை குறைக்கும் ஆற்றல் நிறைந்துள்ளது. பப்பாளி காயை நாம் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் உடல் எடை குறைக்க உதவும்.

எலுமிச்சை சாறு : 

எலுமிச்சை சாறுக்கு உடல் எடையை குறைக்க கூடிய ஆற்றல் இருக்கின்றது. எலுமிச்சை சாறில் உள்ள சத்துக்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்கும் வல்லமை உடையது.

வாழைத்தண்டு ஜூஸ் : 

வாழைத்தண்டு நம்முடைய அருகாமையில் இருக்கும் சந்தைகளிலும், வீடுகளிலும் அதிகமாக கிடைக்கக் கூடிய ஒன்று. இதை ஜூஸ்சாக செய்து அதில்  உப்பு சேர்க்காமல் குடித்து வந்தால் நம் உடலில் உள்ள சிறுநீரக கல் உருவாக்கத்தினை தடுப்பதுடன், உடலில் சேரும் கெட்ட கொழுப்புகளையும் கரைத்து உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.

நடை பயிற்சி :

மனிதனுடைய வாழ்க்கையில் தினசரி உடற்பயிற்சி மிக முக்கியமான ஒன்றாக இருந்து வருகின்றது . இந்த உடற்பயிற்சியில், ஒரு பகுதி தான் நம்முடைய நடைப்பயிற்சி. தினசரி நடைப்பயிற்சியின் மூலம் நமது உடலில் உள்ள எடையை எளிதாகக் குறைக்க முடியும். தினசரி உடல் பயிற்சியால் உடலில் உள்ள இரத்த ஓட்டம் சீராக இருப்பதோடு, உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களும் நன்றாக கரையும்.

அருகம்புல் ஜூஸ் :

தினமும் காலையில் அருகம்புல் ஜூஸ்ஸை ஒரு டம்ளர் அளவில் குடித்து வந்தால், உடலின் பருமன் குறைவதை நாம் உணரலாம். மேலும் இது உடலுக்கு ஆரோக்கியத்தையும், புத்துணர்ச்சியையும் அளிக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *