இரத்தத்தில் உள்ள கொழுப்பு மற்றும் நச்சுக்களை வெளியேற்றணுமா ? அப்போ… இந்த டிப்ஸ்ஸ follow பண்ணுங்க போதும்..!!

மனித உடம்பிலுள்ள இரத்தத்தை  சுத்தபடுத்தி, உடம்பிலுள்ள கொலஸ்ராலை குறைத்து, உடம்பை ஆரோக்கியமாக வைக்க உதவும் இயற்கை உணவுகளை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்:

உடம்பிலுள்ள ரத்தமானது சுத்தமாக இருப்பதனால் ஆரோக்கியமான சருமத்தை தக்கவைக்க பெரும் உதவியாக இருக்கிறது. உடம்பு இருக்கின்ற ரத்தம்  சுத்தமாக இல்லாவிட்டால்,  முகப் பருக்கள், கொப்பளங்கள், தடிப்புகள் வரலாம். மேலும் இதனால் ஒவ்வாமை, குமட்டல்  தலைவலி, தலை சுற்றல் போன்ற வியாதிகளை  உருவாக்க கூடும்  .இரத்த சுத்திகரிப்பினால்  உடல் உறுப்புகளில்   ஆக்சிஜனை தடையின்றியும், சீராகவும் கொண்டு செல்வதற்கு உதவுகிறது. இதனால் சில வகை உணவு பொருட்களை வைத்து  இயற்கையான எளிய முறையில் ரத்தத்தை சுத்திகரிப்பது பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்:

எலுமிச்சை சாறு:

எலுமிச்சை சாறு பருகுவதனால் எளிதில் ரத்தத்தை சுத்திகரிக்க உதவுகிறது. இந்த பழத்தில் இருக்கும் அமிலத்தன்மையானது  உடலில்  உள்ள பி.எச் அளவை சமநிலையில் வைக்கவும், பாக்டீரியா, வைரஸ்கள் போன்ற நச்சுக்களை கொல்லும் தன்மையும் இதில் நிறைந்திருக்கிறது. எலுமிச்சை சாறை எடுத்து வெதுவெதுப்பான நீரில் கலந்து  காலையில் வெறும் வயிற்றில் பருகினால் ரத்தத்தில் உள்ள நச்சுத்தன்மை நீங்கியதுடன், ஆரோக்கியமும் பலப்படும்.

பேக்கிங் சோடா:

பேக்கிங் சோடாவுடன், ஆப்பிள் சிடேர் வினிகரையும் சேர்த்து பயன்படுத்தலாம். இந்த கலவை பி.எச். சீராக்க உதவும். நச்சுத்தன்மை கொண்ட ரத்தத்தில் இருந்து யூரிக் அமிலத்தை நீக்கி சுத்தப்படுத்தவும் உதவும். ஒரு டம்ளர் தண்ணீரில் சிறிதளவு பேக்கிங் சோடா, 3 டீஸ்பூன் ஆப்பிள் சிடேர் வினிகர் கலந்து பருகலாம்.

துளசி மற்றும் மஞ்சள்:

துளசியும், மஞ்சள்தூளையும் கலந்து குடிப்பதால் உடம்பிலுள்ள ரத்தம், சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட  உடல் பாகங்கள் அனைத்திலும்,  உள்ள நச்சுத்தன்மையை நீக்கும் சக்தி துளசிக்கும், மஞ்சள்தூளுக்கும்  அதிகம் சக்திகள் இருக்கிறது. இவை அனைத்து நச்சுக்களையும் சிறுநீர் மூலம் வெளியேற்றி விடும். இந்த இரண்டையும் கலந்து வாரத்திற்கு 3 அல்லது 4 முறை பருகி வந்தால் உடலில் உள்ள ரத்தை சுத்திகரிப்பத்துடன் நோய் எதிர்பு சக்தியையும் அதிகரிக்க உதவுகிறது.மஞ்சள் தூளை கிருமி நாசினியாகவும் பயன்படுத்தலாம்.

இரத்தத்தை சுத்திகரிப்பதினால் உடம்பிலுள்ள கொலஸ்ட்ராலை குறைப்பதுடன், கல்லிரல் பிரச்சனை, கேன்சர் போன்ற நோய்களுக்கு இது ஒரு தீர்வாக உதவுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *