இந்த அருமையான டீ யை மட்டும் தினமும் குடிப்பதால… உடம்புல இவ்ளோ மாற்றங்களா ? அப்போ… இனிமேல் ட்ரை பண்ணி பாருங்க..!!

கிரீன் டீயை நாள் தோறும் குடித்து வருவதால், உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து, உடம்பை சுறுசுறுப்பாக வைக்க உதவுவது மட்டுமல்லாமல், இதனால் பல நன்மைகள் கிடைப்பதை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்:
கிரீன் டீயின் அதிக அளவில் உயர்தர மிக்க ஆன்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ளதால், உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்து உடம்பை சுறுசுறுப்பாக வைக்க உதவுகிறது.மேலும்  பழங்கள், காய்கறிகள், கீரைகளில் உள்ளதை சத்துக்களை விட அதிகளவு சத்துகள் இந்த கிரீன் டீயில் நிறைந்துள்ளது.ஒரு கப் கிரீன் டீ குடித்தால், 10 கப் ஆப்பிள் ஜுஸ் குடிப்பதற்கு சமமாகும். இதில் உள்ள உயர்தரமான ஆன்டி ஆக்சிடென்ட்கள் தீமையை ஏற்படுத்த கூடிய பிரீரேடி செல்களை சமன்செய்து, உடலில் உள்ள ஒவ்வொரு செல்லையும் புதுப்பிக்க செய்து, வாழ்நாட்களை நீடிக்க செய்கிறது.

கிரீன் டீ-யில் உள்ள பாலிபீனால் என்னும் ஆன்டிஆக்சிடன்ட், உடலில் உள்ள திசுக்களில் நடைபெறும் ரசாயன மாற்றத்தால் ஏற்படம் பாதிப்புகளைத் தடுத்திடுவதால், வயதாகும் செயல்பாட்டைத் தாமதப்படுத்தி, வாழ்க்கையை நீட்டிக்க செய்கிறது.

புற்றுநோய் வராமல் தடுக்கிறது:

வைட்டமின் சி-யை விட, இதில் இருக்க கூடிய ஆன்டிஆக்சிடன்ட் 100 மடங்கு புற்றுநோயினால் உருவாகும் செல்களை எதிர்த்துப் போராடுவதால் புற்றுநோய்க்கான வாய்ப்பும்  குறைந்து விடுகிறது.

உடல் எடை குறைத்து, உயர் ரத்த அழுத்ததையும் குறைக்கும்:

நாள்தோறும் கிரீன் டீ குடித்து வருவதால், உடலில் உள்ள கெட்ட கொழுப்பு செல்களை எரித்து, உடம்பில் வளர்சிதை மாற்றத்தை ஏற்படுத்தி, உயர் ரத்த அழுத்தத்துக்குக் காரணமான ஹார்மோன் அளவையும் கட்டுப்படுத்தி, ரத்தத்தில் சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. எனவே கிரீன் டீ குடிப்பதால், நாள் ஒன்றுக்கு 70 கலோரி வரை எரிக்க முடியும்.

இதயநோய் வராமல் தடுக்கும்:

கிரீன் டீ குடிப்பவர்களுக்கு,  உடம்பில் உருவாகும் தேவையில்லாத கெட்ட கொழுப்புக் குறைந்து, இதனால் உருவாகும் இதய சம்பந்தமான நோய்கள் வரும் வாய்ப்பு பாதியளவாக குறைகிறது. மாரடைப்புக்குப் பிறகு செல்கள் இறப்பதைத் தடுத்து, இதயதில் உள்ள செல் வளர்ச்சியை அதிகப்படுத்துகிறது. மேலும் இது ரத்தம் உறைவதையும் தடுக்க உதவுகிறது.

மன அழுத்தம் நீக்கும்:

இந்த கிரீன் டீயில் அதிகளவு எல்-தினைன் என்ற அமினோ அமிலம் உள்ளதால்,இது மன அழுத்தம், பதற்றத்தைப் போக்க பெரிதும் உதவுகிறது. மேலும், டோபோமைன் அளவையும்  அதிகரிக்கச் செய்கிறது. இதில் காபியின் அளவை காட்டிலும், மிகக் குறைந்த அளவே காஃபைன் உள்ளதால், உடனடி புத்துணர்வைத் தந்து, மூளையின் செயல்திறனை மேம்படுத்துகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க:

கிரீன் டீ-யில் உள்ள பாலிபீனால் மற்றும் ஃபிளவனாய்ட் என்ற ரசாயனங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி, நோய்க் கிருமித் தொற்றில் இருந்து நம்மைப் பாதுகாக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *