இந்த லேகியத்தை மட்டும்… வாரத்துல மூன்று நாள் சாப்பிட்டு பாருங்க… முதுகு வலி, கால் வலி எல்லா காணாம போயிரும்..!!

இந்த பூண்டு லேகியத்தை சாப்பிடுவதால், வாயுத்தொல்லையினால் உருவாகும் முதுகு பிடிப்பு, வயிறு வலி, கை மற்றும் கால் வலி போன்ற வலியிலிருந்து அவதிப்படுபவர்களுக்கு, இதை செய்து தொடர்ந்து ஒரு வாரம் சாப்பிட்டு வந்தாலே பொதும், நல்ல நிவாரணம் கிடைக்கும்.  மேலும் இதை ஒரு மாத காலம்  சாப்பிட்டு வந்தால் வாயுத்தொல்லையிலிருந்து முற்றிலும் விடுபட முடியும். இந்த லேகியத்தை சாப்பிடுவதால் மலச்சிக்கல் மற்றும் இடுப்பு வலியிலிருந்து நல்ல தீர்வு கிடைக்கும்.

பூண்டு லேகியம் செய்ய தேவையான பொருட்கள்:

பூண்டு               – அரைக் கப்
கருப்பட்டி       – 2 துண்டுகள்
இஞ்சிச்சாறு  – தேவையான அளவு
பால்                   – ஒரு கப்

செய்முறை:

முதலில் பூண்டுகளை எடுத்து தோல் உரித்ததும், மிக்சிஜாரில் போட்டு பரபரப்பாக அரைத்து எடுத்து கொள்ளவும். பின்பு அடுப்பில் வாணலியை வைத்து, அதில் கருப்பட்டி துண்டுகளை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கரையும் அளவுக்கு, நன்கு கொதிக்க விட்டு, இறக்கி வடிகட்டி கொள்ளவும்.

அதன் பின்பு அடுப்பில் கடாயை வைத்து, அதில் பாலை ஊற்றி கொதிக்க வைத்ததும், அதனுடன் அரைத்த பூண்டு பேஸ்ட்டை போட்டு, இஞ்சிச்சாறு, வடிகட்டி வைத்த கருப்பட்டிசாறை ஊற்றியபின், கரண்டியால் அடிக்கடி  கிளறி விட்டு, நன்கு கெட்டியானதும், இறக்கி ஆறவைத்து, உருண்டைகளாக உருட்டி எடுத்து பரிமாறினால், ருசியான பூண்டு லேகியம் ரெடி.

குறிப்பு: 

இந்த லேகியத்தை பிரிட்ஜில் வைத்து ஒரு மதத்திற்கும் மேல் பயன்படுத்தி கொள்ளலாம். இது இடுப்பு வலிக்கும் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *