முதல்வர் வரும் வரை உயிருக்கு பாதுகாப்பில்லை…. கதறும் கிராம மக்கள்… குண்டூரில் பரபரப்பு..!!

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாய்டு வரும்வரை நாங்கள் ஊருக்குள் செல்ல மாட்டோம் என கிராம மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் நரசாபுரம் கிராமத்தை  சேர்ந்த பொதுமக்கள் YSR காங்கிரஸ் கட்சியினர் தாக்குதல் நடத்துவதாக கூறி கடந்த நான்கு தினங்களாக தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில் அமைக்கப்பட்ட முகாமில் தங்கி வந்தனர். இந்த நிலையில் அம்மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கிராமங்களுக்கு செல்ல இருந்த நிலையில் அவரை காவல்துறையினர் வீட்டுக்காவலில் வைத்தனர்.

Image result for சந்திரபாபு நாயுடு குண்டூர்

இதற்கிடையே தெலுங்கு தேசம் கட்சி முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த 125 பேரிடம்  பேச்சுவார்த்தை செய்து 65 பேரை காவல்துறையினர் பாதுகாப்புடன் அவரவர் கிராமத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். மீதமுள்ளவர்களையும் அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஆனால் சந்திரபாபு நாயுடு வரும்வரை ஊருக்கு செல்ல மாட்டோம். தங்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்றும் அவர்கள் கூறி முகாமில் தொடர்ந்து இருந்து வருகின்றன.

Image result for சந்திரபாபு நாயுடு குண்டூர்

இந்த நிலையில் ஆந்திர மாநில உள்துறை அமைச்சர் இதுகுறித்து  செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் குண்டூரில் பல்வேறு நில ஆக்கிரமிப்புகளில் ஈடுபட்டவர்கள் காவல்துறையினர் தங்கள் மீது வழக்கு பதிவு செய்யக் கூடும் என்ற அச்சத்தில் நாடகமாடி வருவதாக கூறினார். கிராம மக்களில் சிலர் வேண்டும் என்று சட்டம் ஒழுங்கு சீர் குலைக்கும் விதமாக நடப்பதாகவும்,சந்திரபாபு நாயுடு அங்கு செல்ல இருந்ததால் பிரச்னையை கட்டுப்படுத்த அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.