துலாம் இராசிக்கு… “எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்”… வியாபாரம் செழிக்கும்.!!

துலாம் ராசி அன்பர்களே…!! இன்று பக்குவமாக பேசி பாராட்டுகளைப் பெறும் நாளாக இருக்கும். விட்டுப் போன உறவுகள் மீண்டும் வந்து சேரக் கூடும். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் விலகி செல்லும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். இன்று திடீர் கோபம் கொஞ்சம் ஏற்படக்கூடும், பார்த்துக்கொள்ளுங்கள். நிதானமாக பேசுவது காரிய வெற்றிக்கு உதவும். மற்றவர்களின் காரியங்களில் ஈடுபடும் போது கவனமாக இருங்கள். இன்று கொஞ்சம் உழைப்பு வீணாக கூடும். எனவே திட்டமிட்டு எதையும் செய்வது நல்லது. திட்டமிட்ட பணியை எளிதாக நிறைவேற்றுவீர்கள். இன்று நிகழ்வுகள் இனிதாகவே அமையும். தொழில் வியாபாரம் செழித்து  மகிழ்ச்சியும் கிடைக்கும். உபரி பண வருமானமும் கிடைக்கும்.

உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். அவர்களிடம் இருந்து உதவிகள் கிடைக்கும். நண்பர்களிடம் இருந்து உதவிகள் கிடைக்கும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை அளிக்கக் கூடும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது ஊதா நிறத்தில் கைக்குட்டை வைத்துக் கொள்வது சிறப்பு. உங்களுக்கு ஊதா நிறம் அதிர்ஷ்ட வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும். அதே போல வெற்றி வாய்ப்புகளை தேடி கொடுக்கும். அதே போலவே நீங்கள் காலையில் எழுந்ததும் மகாலட்சுமி வழிபாட்டை மேற்கொண்டால் அனைத்து காரியமும் சிறப்பாகவே இருக்கும். இன்றைய நாளை மகாலட்சுமி வழிபாடுடன்  தொடங்கினால் வெற்றி வாய்ப்புகள் வந்து குவியும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்டமான  எண் : 5 மற்றும் 7

அதிர்ஷ்டமான  நிறம் : ஊதா மற்றும் நீல நிறம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *