நம் நாட்டின் முன்னேற்றத்தை நோக்கி ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் இன்று 73-ஆவது சுதந்திர தின விழா பிரம்மாண்டமாக கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதே போல சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் பழனிசாமி தேசியக்கொடியை ஏற்றி வைத்து மக்களுக்கு உரையாற்றினார். அதேபோல அந்தந்த மாநிலங்களில் முதலமைச்சர்கள் கொடியேற்றி சிறப்புரையாற்றினர். இந்த சுதந்திரதின நன்னாளில் எந்த வித அசம்பாவிதங்களும் நடக்காமல் இருக்க நாடு முழுவதும் உள்ள அணைத்து முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இன்றைய இனிய சுதந்திர தின நாளில் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் நாட்டு மக்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் சுதந்திரதின வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அதில், ஒவ்வொரு இந்தியருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள். நம் நாட்டின் முன்னேற்றத்தை நோக்கி ஒன்றிணைந்து செயல்படுவோம், நமது கனவுகளின் இந்தியாவை உருவாக்குவோம். ஜெய் ஹிந்த்.
Wishing every Indian a Happy Independence Day. Let's work together towards progress of our country and create the India of our dreams. ?? Jai Hind.
— Virat Kohli (@imVkohli) August 15, 2019