கோடை வெயில் வாட்டி எடுக்காமல் இருக்க வால்பாறைக்கு செல்லுங்கள்…!!

கோடை வந்துட்டாலே உடலில் உள்ள புத்துணர்ச்சி போய் உடலை ஒரு சோர்வு நிலை ஏற்படுவது வழக்கம்.  இத்தகைய நேரங்களில் நம் உடல் ஒரு குளிர்ச்சியான இடத்தை தேடி செல்கிறது.

மேலும் இத்தகைய காலகட்டத்தில் குழந்தைகளும் வெப்பத்தின் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள்.இந்த வெயில் காலத்தை சமாளிக்க உதவும் வழிமுறைகளை பார்ப்போம். இந்த கோடை வாட்டத்தில் இருந்து தப்பிக்க வால்பாறைக்கு செல்லுங்கள்.

வால்பாறை :

இது தமிழ்நாட்டின் சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். இது கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ளது. இந்த மலைத்தொடர் தேயிலை தோட்டங்கள் நிறைந்த  மாசற்ற சுற்றுசூழலுடன், பசுமை போர்த்திய மலைகள் கொண்டுள்ளது. அழகிய காடுகளால் மிகவும் செழிப்பாக உள்ளது.

வால்பாறை  துாய்மையான, இயற்கை கொஞ்சும் பகுதியாக விளங்குகிறது. மேற்கு தொடர்ச்சி மலைகளில், ஆனைமலை குன்றுகள் மேல் வால்போன்று குறுக்காக அமைந்தள்ள இயற்கை நகரமாகும்.

இந்த பகுதியை  சுற்றிலும் 3 எல்லைகளில் ஆனைமலை புலிகள் காப்பகமும், மற்றொருபுறம் கேரளாவின் இரவிகுளம் தேசிய பூங்காவும் உள்ளது. எனவே இயற்கை விரும்பிகளின் சொர்க்க பூமியாக வால்பாறை திகழ்கிறது. வால்பாறையின் கால நிலை மனதிற்கு இன்பம் கூட்டுபவையாக உள்ளது. எனவே மீண்டும் மீண்டும் சுற்றுலாப்பயணிகள் இந்த இடத்திற்கு வருவது வழக்கம்.