இனிபெய்யும் ஒவ்வொரு சொட்டு மழைநீரையும் சேமிப்பது என உறுதி கொள்வோம் -எஸ் பி வேலுமணி.!!

இனிபெய்யும் ஒவ்வொரு சொட்டு மழைநீரையும் சேமிப்பது என உறுதி கொள்வோமாக என்று அமைச்சர் எஸ் பி வேலுமணி ட்விட்டரில் தெரிவித்துள்ளார் 

பருவமழை பொய்த்ததால் சமீபத்தில் தமிழகத்தில் சென்னை உட்பட பல பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவியது. இதனால் மக்கள் தெருத்தெருவாக காலிகுடங்களுடன் அலைந்தனர். லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டும் தட்டுப்பாடு தீர்ந்தபாடில்லை. இதனால் தமிழக அரசு ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வந்துள்ளது.

Related image

இந்நிலையில் அமைச்சர் எஸ் பி வேலுமணி ட்விட்டரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மழை நீர் சேமிப்பின் அவசியம் பற்றியும் அதனால் நமக்கு மட்டுமின்றி நம் அடுத்த தலைமுறைக்கும் விளையும் பயன்களை பற்றி அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் பெய்த மழையால் எத்தனை சதவீத நீரை நாம் சேமித்து வைத்திருக்கிறோம்?. அரசு தொடர்ந்து தன் கடமையை செய்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் மழைநீர் சேமிப்பை ஒரு குழுவோ ஒரு அமைப்போ ஒரு அரசு மட்டும் செய்து முடிப்பது அவ்வளவு சுலபமல்ல அவரவர் இருப்பிடத்தில் மழை நீரை சேமிப்பது இதற்கு நிரந்தரத் தீர்வாகும் என்று தெரிவித்துள்ளார்.