எடப்பாடி இதை செய்யட்டும்..! நான் அரசியலை விட்டு விலகுறேன்… ரெடியான OPS, பரபரப்பு பேட்டி …!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஆரம்பத்தில் இருந்து, எடப்பாடி நடவடிக்கை என்ன ? என்பதை பத்திரிக்கை நண்பர்கள் கவனித்துக் கொண்டு இருக்கிறீர்கள். யார் மீது குற்றம் ? என்பதை தமிழக மக்கள் நன்றாகவே கணித்து வைத்திருக்கிறார்கள்.

நேற்று கூட ஏதோ பொத்தாம் பொதுவாக  நான் சட்டமன்றத்தில் அரை மணி நேரம் மாண்புமிகு முதலமைச்சர் திரு மு.க ஸ்டாலின் அவர்களை சந்தித்து பேசி இருக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார்.அது முற்றிலும் தவறானது. உண்மைக்கு புறம்பானது. அதற்காகத்தான் நான் இதுவரை யாருக்கும் அந்த கடுமையான சொல்லைச் சொன்னதில்லை.

எடப்பாடி  மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை நான் சந்தித்ததை நிரூபித்தால்,  நான் அரசியலில் இருந்து விலகத் தயார். நிரூபிக்கவில்லை என்றால்,  எடப்பாடி பழனிச்சாமி அரசியலை விட்டு விலகத் தயாரா ? என்பது கேட்டிருக்கிறேன், அதற்கு உரிய பதிலை அவர் சொல்ல வேண்டும்.

என்னைப்பற்றி தொண்டர்களுக்கு நன்றாக தெரியும். தொண்டர்களை பற்றி எனக்கும் நன்றாக தெரியும். உரிய நேரத்தில், உரிய முறையில் அவர்களை நான் அணுகுவேன் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன் என தெரிவித்தார்.