சிம்ம இராசிக்கு… “சமயோசிதமாக செயல்படுவீர்கள்”.. கோபத்தை மட்டும் குறையுங்கள்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று சமயோசிதமாக செயல்படுவீர்கள். நல்ல விஷயங்களை பேசுவதில் ஆர்வம் வளரும். தொழில் வியாபாரத்தில் அபரிதமான வளர்ச்சி உருவாகும். ஆதாய பணவரவு கிடைக்கும். வெகுநாள் காணாமல் தேடிய பொருள் புதிய முயற்சியால் கையில் வந்து சேரும். இன்று குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடக்கும். திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தை சாதகமான பலனையே கொடுக்கும். கணவன் மனைவிக்கு இடையே சந்தோஷம் நிலவும். பிள்ளைகளுக்காக செய்யும் பணிகள் திருப்தியைக் கொடுக்கும்.

அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் இருந்த தகராறுகள் நீங்கும். பெண்கள் வீண் பேச்சைக் குறைத்து செயலில் கவனம் செலுத்துவது நல்லது. இன்று பண வரவு தாராளமாகவே இருக்கும். கோபத்தை மட்டும் குறைத்துக் கொள்வது மிகவும் நல்லது. அது மட்டுமில்லாமல் வாகனத்தில் செல்லும் பொழுது கொஞ்சம் பொறுமையாக  நிதானமாக செல்லுங்கள். கூடுமானவரை தொலைபேசியில் பேசிக் கொண்டு செல்லாதீர்கள். புரிந்துகொண்டு செயல்படுங்கள். இன்று மாணவச் செல்வங்கள் கூர்ந்து கவனித்து பாடங்களை படிப்பது மிகவும் சிறப்பு.

சக மாணவரின் ஒத்துழைப்புடன் சில முக்கியப் பணியையும் செய்வீர்கள். ஆசிரியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆனால் பாடத்தில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *