லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் உள்ளிட்ட பலர் நடித்து வரும் லியோ படத்தின் முதல் கட்ட படபிடிப்பை காஷ்மீரில் நடத்தி முடித்த படக்குழு சென்னை திரும்பியது. இதனை அடுத்து சென்னையிலும் ஹைதராபாத்திலும் ஷூட்டிங் நடைபெற உள்ளது. அதன்படி இன்று ஷூட்டிங் ஆரம்பிக்க உள்ளதாம்.
இந்நிலையில் லியோ படத்திற்காக விஜய் வீடு போன்று ஒரு செட்டை போட்டு உள்ளார்களாம். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் ஹைதராபாத்திற்கு படக்குழு செல்ல உள்ளதாம். ஹைதராபாத்தில் தான் நடிகர் அர்ஜுன் ஷூட்டிங்கில் கலந்து கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது.