தமிழகத்தில் தொழில் அதிபராக சாதித்த லெஜண்ட் சரவணன் தற்போது முழு நேர நடிகராக மாறிய உள்ளார். தனது முதல் படமான லெஜெண்ட் பல விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் இப்படம் தற்போது ஓடிடியில் வெளியான நிலையில் எதிர்பாரா விதமாக ஓடிடி தளத்தில் இப்படத்திற்கு அதிக வியூஸ் கிடைத்தது. நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளதாக பட குழு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக லெஜெண்ட் படத்தின் இயக்குனர் ஜேடி, ஜெர்ரி அளித்த பேட்டியில் ஒரு முக்கிய விஷயத்தைப் பற்றி விளக்கம் அளித்திருந்தார். முன்னதாக நயன்தாரா நடிக்க இருந்த இடத்தில் தான் பிரபல ஹிந்தி நடிகையை கொண்டு வந்தார்கள் என போலி செய்தி ஒன்று பரவியது. அந்த செய்தி குறித்து தற்போது இயக்குனர் விளக்கம் அளித்துள்ளார். நயன்தாராவை நடிக்க கேட்டது உண்மைதான். ஆனால் ஹீரோயினாக அல்ல. வேறு ஒரு முக்கிய ரோலில் நடிக்கத்தான் அவரைக் கேட்டோம் என்ன தெரிவித்தார்.