கமல்ஹாசன் தலைமையில்…. சினேகனுக்கு திருமணம்…. தீயாய் பரவும் தகவல்….!!!

பாடலாசிரியர் சினேகனுக்கு கமல்ஹாசன் தலைமையில் திருமணம் நடக்க இருப்பதாக சமூகவலைதளங்களில் செய்தி பரவி வருகிறது.

தமிழ் சினிமாவில் வெளியாகியுள்ள பல ஹிட் பாடல்களை எழுதிய சினேகன் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர். இந் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கமல்ஹாசனிடம் ஏற்பட்ட நெருக்கம் காரணமாக கமலின் மக்கள் நீதி மையம் கட்சியில் சேர்ந்து நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அக்கட்சி சார்பாக விருகம்பாக்கம் தொகுதியில் நின்று போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

இந்நிலையில் கவிஞன் என்று அழைக்கப்படும் சினேகனுக்கு கூடிய விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும், அது மக்கள் நீதி மையம் கட்சி தலைவரும், பிரபல நடிகருமான கமல்ஹாசன் தலைமையில் நடக்க இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.