“தி பலூன் ஸ்டைலிஸ்ட்” புதுவகையான நிறுவனத்தைத் தொடங்கிய முன்னனி நடிகை…!


தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான ஹன்சிகா ‘தி பலூன் ஸ்டைலிஸ்ட்’ என்ற புதிய நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார்.

நடிகை ஹன்சிகா தமிழ் திரையுலகில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே விஜய், சூரியா, தனுஷ், போன்ற பிரபல நடிகர்களுடன் ஜோடியாக நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடத்தில் ‘மஹா’ என்ற படத்தில் தற்போது நடித்துவருகிறார். இது அவருடைய 50 வது படம். மேலும் இந்த படத்தில் கௌரவ வேடத்தில் சிம்பு நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. இதற்கடுத்து பெரிதாக பட வாய்ப்புகள் ஏதும் அவருக்கு இல்லை.

எனவே “தி பலூன் ஸ்டைலிஸ்ட்” என்ற புதிய நிறுவனம் ஒன்றை நடிகை ஹன்சிகா தொடங்கியுள்ளார். வீட்டு விசேஷங்களுக்கும் திருமணங்களுக்கும் பலூன் மூலம் வித்தியாசமான முறையில் அலங்காரங்களை செய்து கொடுப்பதுதான் இந்த நிறுவனத்தின் பணி. இதுகுறித்து அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஏற்கனவே கொரோனா ஊரடங்கில் யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கிய ஹன்சிகா தற்போது புதிய தொழில் நிறுவனத்தையும் தொடங்கியுள்ளார். படவாய்ப்புகள் குறைந்து வருவதால் மற்ற தொழில்களில் கவனம் செலுத்த ஹன்சிகா ஆரம்பித்துவிட்டதாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு எழுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *