முதல்வர் அதிமுக தலைமையகம் வருகை …….. வெளியாகிறது வேட்பாளர்கள் பட்டியல்….

அதிமுக_வின் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்ற நிலையில்  தமிழக முதலவர் எடப்பாடி பழனிசாமி அதிமுக தலைமையகம் வந்துள்ளார் .

நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . தமிழகத்தில் இரண்டாம் கட்ட வாக்குபதிவில் ஏப்ரல் 18_ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகின்றது . நாடாளுமன்ற வாக்குப்பதிவு நடைபெறும் போதே தமிழகத்தில் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது . இதனால் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகள் சூடுபிடித்து உள்ளது .

தமிழகத்தில் அதிமுக தலைமையில் அதிமுக 20 , பாஜக 5 , பாமக 7 , தேமுதிக 4 , புதிய தமிழகம் 1 , புதிய நீதி கட்சி 1 , தமாக 1 , N,.R காங்கிரஸ் ( புதுச்சேரி ) தொகுதியிலும் போட்டியிடுகின்றது. இந்நிலையில் சென்னையில் உள்ள கிரவுண்ட் பிளாசா தனியார் ஹோட்டலில் அதிமுக ஒருங்கிணைப்பாளர்  ஓ.பன்னீர்செல்வம் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதி பட்டியலை இன்று காலை வெளியிட்டார்.

 

Image result for ஓ.பன்னீர்செல்வம் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதி பட்டியலை வெளியிட்டார்.

 

இந்நிலையில் அதிமுக_வின் மாவட்ட செயலாளர் கூட்டம் இன்று அக்கட்சியின்  தலைமையகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டம் முடிந்த நிலையில் மாலையில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியாகுமென எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிமுக தலைமையகம் வந்துள்ளார். இன்னும் சற்று நேரத்தில் அதிமுக நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது .