
ராஜஸ்தான் மாநிலத்தில் பெண்கள் பாரம்பரியமாக நாட்டுப்புற நடனங்கள் அல்லது குழு நடனங்கள் ஆடுவது வழக்கம். அம்மாநிலத்தில் உள்ள ஹனுமன்கரில் பொழுதுபோக்குக்காக ஒட்டகத்தை துன்புறுத்திய நடன வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோவில் ஒரு பெண் வெயில் அதிகமாக உள்ள நிலையில் ஒரு கயிற்று கட்டிலின் மேல் படுக்க வைக்கப்பட்டு இரு கால்கள் கட்டப்பட்ட நிலையில் உள்ள ஒட்டகத்தின் மேல் ஏறி நடனம் ஆடுகிறார். இதனை அங்கிருந்தவர்கள் பொழுதுபோக்கிற்காக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி விலங்கு நல அமைப்பு மற்றும் சமூக ஆர்வலர்களை கோபமடைய வைத்துள்ளது.
இந்த வீடியோ குறித்து பலரும் கடுமையான விமர்சனங்களை எழுப்பியுள்ளனர். சமூக ஆர்வலர்கள் சிலர் விலங்குகளை துன்புறுத்துவது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இந்த வீடியோ தற்போது பல லட்சம் பார்வையாளர்களைக் கடந்து வைரலாகி வருகிறது.
View this post on Instagram