Playstore யில் தொடரும் ஆப் நீக்கம் … ஆண்ட்ராய்டு போனில் மால்வேர் தாக்குதல் ..!!

கூகிள் நிறுவனம் playstore யில் இருந்து  கேம் ஸ்கேனர் செயலியை நீக்கியுள்ளது .

லட்சக்கணக்கான மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் செயலி கேம் ஸ்கேனர். இந்த செயலியில்  ஸ்கேன் செய்யப்படும் புகைப்படங்களை எளிதில் பிடிஎப் ஆக மாற்றலாம்.இந்நிலையில் , இந்தச் செயலி மீது மால்வேர் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். எனவே, கேம் ஸ்கேனர் செயலியை கூகுள் நிறுவனம் “playstore” இல் இருந்து நீக்கியுள்ளது.

Image result for camscanner

மேலும்,  மால்வேர் தாக்குதல் ஆண்ட்ராய்டு வெர்ஷனில் மட்டுமே இருப்பதாகவும்,  ஐஓஎஸ் வெர்ஷனில் வழக்கம்போல் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கேம் ஸ்கேனர்  செயலியில் வணிக வருவாய்க்காக  ஏராளமான விளம்பரங்கள் இடம்பெறும் நிலையில், இதில் உள்ள போலி விளம்பரங்கள் மூலமாகவே  மால்வேர் தாக்குதல் ஏற்பட்டுள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.