நிலைதடுமாறிய இருசக்கர வாகனம்…. விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

நின்று கொண்டிருந்த லாரி மீது இரு சக்கர வாகனம் மோதி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஐபேடு கிராமத்தில் வேலு என்பவர் வசித்து வந்துள்ளார்‌. இவர் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தனது மருமகன் குணசேகரனுக்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தினால் அவரை இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அதன்பின் வீட்டிற்கு செல்லும் வழியில் நின்று கொண்டிருந்த லாரி மீது கட்டுபாட்டை இழந்த இருசக்கர வாகனம் மோதியது.

இதில் படுகாயமடைந்த வேலு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பின்னர் பலத்த காயமடைந்த குணசேகரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *