இந்திய சந்தையில் புது சாதனங்களை களமிறக்க காத்திருக்கும் XIAOMI நிறுவனம்…. ஆவலுடன் காத்திருக்கும் வாடிக்கையாளர்கள்….!!

சியோமி நிறுவனம் ஆகஸ்ட் 30 ஆம் தேதி இந்திய சந்தையில் புது சாதனங்களை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த வரிசையில், XIAOMI note book pro 120G laptop மற்றும் Smart TV X series மாடல் அறிமுகம் செய்யப்பட இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

புது சாதனங்கள் வெளியீட்டுக்கான teaserகளில் note book pro 120G மாடல் அதிவேகம் மற்றும் சிறப்பாக இருக்கும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த laptop டீசர் புகைப்படங்களை வைத்து பார்க்கும் போது தோற்றத்தில் 2021 மாடலை போன்றே காட்சியளிக்கிறது. இந்த laptopபில் வழங்கப்பட இருக்கும் அம்சங்கள் குறித்து XIAOMI எந்த தகவலையும் வழங்கவில்லை.

இந்த note bookல் pro 120G என்ற குறியீடு உள்ளதை காண முடியும். இது 120Hz ஸ்கிரீன் வழங்கப்படுவதை குறிப்பிடலாம் என தெரிகிறது. புதிய REDMI notebook அம்சங்கள் பற்றி XIAOMI சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. இந்த laptop REDMI book pro 15 மாடல் REDMI book pro மாடலின் சற்றே ட்வீக் செய்யப்பட்ட வெர்ஷனாக இருக்கும் என தெரிகிறது.