பட்டா பெயர் மாறுதலுக்கு விண்ணப்பித்த நபர்…. லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சீனிவாசா நகர் பாரதியார் தெருவில் கலைச்செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுலோச்சனா என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் கலைச்செல்வன் பொதிகை நகரில் 1500 சதுர அடிக்கு தனது மனைவியின் பெயரில் இடம் வாங்கி கிரையம் செய்து பட்டா மாறுதல் பெற வேண்டி பொத்தூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.

அதற்கு கிராம நிர்வாக அலுவலர் கந்தசாமி ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இதுகுறித்து சுலோச்சனா லஞ்ச ஒழிப்பு போலீஸ் புகார் அளித்தார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி சுலோச்சனா ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கந்தசாமியிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கந்தசாமியை கையும் களவுமாக பிடித்தனர்.