“நிலம் கையகப்படுத்தும் சட்டம் ரத்து”உயர்நீதிமன்றம் உத்தரவு..!!

நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக தமிழக அரசு 2015ஆம் ஆண்டு கொண்டு வந்த சட்டத்தை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

நெடுஞ்சாலை உள்ளிட்ட அரசின் அவசர திட்டங்களுக்காக தனியார்  நிலங்களை கையகப்படுத்த வெளிப்படைத்தன்மை,மறுவாழ்வு மற்றும் நியாயமான இழப்பீடு சட்டம் 105 ஆவது பிரிவின்படி புதிய சட்டம் ஒன்றை மத்திய அரசு 2013 ஆம் ஆண்டு கொண்டு வந்தது. மத்திய அரசின் இச்சட்டத்தை தொடர்ந்து மாநில அரசு நிலங்களை கையகப்படுத்தும் வகையிலும் நெடுஞ்சாலைகள் சட்டம்,தொழில் பயன்பாட்டிற்கான சட்டம்,ஹரிஜன் நல சட்டம் போன்ற சட்டங்களை நடைமுறைப்படுத்தும் வகையிலும் 2015 ஆம் ஆண்டு 105(a) என்ற சட்டப்பிரிவை வெளிப்படைத்தன்மை,மறுவாழ்வு,நியாயமான இழப்பீடு போன்றவற்றோடு சேர்த்து தமிழக அரசு கொண்டு வந்தது.

Image result for 8 வழி சாலை நில அபகரிப்பு

மத்திய அரசு சட்டம் கொண்டு வந்து ஒரு ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக அரசு கொண்டுவந்த இப்புதிய சட்டம் செல்லாது என அறிவிக்க வேண்டுமென ராமநாதபுரத்தைச் சேர்ந்த கருணாநிதி உட்பட 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.இவ்வழக்கு   நீதிபதி மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது .

Image result for சென்னை உயர்நீதிமன்றம்

இதில் , மனுதாரர்கள் சார்பில் தமிழக அரசு கொண்டு வந்த புதிய சட்டத்தில் மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தாமல் நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என்ற விதியும் , நிலங்களைக் கையகப்படுத்திய ஆறு மாதத்திற்குள் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்ற விதியும் இல்லாததால் நில உரிமையாளர்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாவதாக  தெரிவிக்கப்பட்டது.இதனை உள்வாங்கிய  நீதிபதிகள் நில அபகரிப்பு தொடர்பாக தமிழக அரசு கொண்டு வந்த புதிய சட்டம் செல்லாது என்று தீர்ப்பளித்தனர்.