“கதை திருட்டில் சிக்கிய லால் சலாம்”… ஐஸ்வர்யா ரஜினிகாந்த்துக்கு இப்படி ஒரு சிக்கலா…?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா. இவர் 3 மற்றும் வை ராஜா வை போன்ற படங்களை இயக்கியுள்ள நிலையில் தற்போது லால் சலாம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய வேடத்தில் நடிக்க ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். இந்நிலையில் இயக்குனர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த மோகன் என்பவர் தன்னுடைய கதையை தழுவி ஐஸ்வர்யா லால் சலாம் படத்தை இயக்கி வருவதாக புகார் கொடுத்துள்ளார்.

அதாவது கால்பந்து விளையாட்டில் இரு நண்பர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்த ஒரு கதையை மோகன் லைகா நிறுவனத்திடம் கூறியுள்ளார். இந்த கதையை தழுவி தான் ஐஸ்வர்யா இயக்கம் படத்தின் கதை இருக்குமோ என்ற சந்தேகம் மோகனுக்கு இழந்துள்ளது. மேலும் இதை எடுத்து இருவரின் கதையை படித்து பார்த்துவிட்டு இருப்பதையும் வெவ்வேறு என்பது தெரியவந்துள்ளது. இதனால் கதை திருட்டு சர்ச்சைக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.