தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுக்கும் லட்சுமி மேனன்!

கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட லட்சுமி மேனன் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார்.  இவர் தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

முதலில் இவர் நடித்தது   மலையாளத்தில் வெளிவந்த ரகுவிண்டெ சுவந்தம் ரசியா (2011) என்ற திரைப்படம் வெற்றி கண்டதை தொடர்ந்து தமிழ் திரை உலகின்பக்கம் இவரது பார்வை திரும்பியது.

தமிழில் இவர் நடித்த சுந்தர பாண்டியன் மற்றும் கும்கி திரைப்படங்களின் மூலமாக தமிழ்த் திரைப்படவுலகில் பிரபலம் ஆனார்.

லட்சுமி மேனன் கடைசியாக 2016ஆம் ஆண்டு விஜய் சேதுபதிக்கு ஜோடியாக `றெக்க’ படத்தில் நடித்து  பின்பு திரைதுறையில் இருந்து முழுக்கு போட்டார்.

இந்நிலையில் லட்சுமி மேனன் தனது உடல் எடையை குறைத்து மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த இருக்கிறார். இந்த படத்தை சுசீந்திரன் இயக்கஉள்ளார். இதில் விக்ரம் பிரபுக்கு ஜோடியாக லட்சுமி மேனன்  நடிக்க இருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.