கன மழையால் நிரம்பிய ஏரி…. நீர் வழிந்ததை வரவேற்ற மக்கள்…. மகிழ்ச்சியில் விவசாயிகள்….!!!

ஏரியில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரியாவில் நெல்லூர்பேட்டை ஏரி அமைந்துள்ளது. இது சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் 106 மில்லியன் கன அடி தண்ணீர் கொள்ளளவு கொண்டுள்ளது. இதில் டிசம்பர் மாதம் பெய்த கனமழையின் காரணமாக ஏரி நிரம்பி உள்ளது. மேலும் மோர்தானா அணையும் நிரம்பியதால் ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து நிரம்பி உள்ளது.

இது குறித்து அறிந்த சுற்றுப்புற பகுதியில் வசித்த மக்கள் ஏராளமானோர் இங்கு வந்து ஏரிநீர் வழிந்ததை வரவேற்று பூஜை செய்தனர். இதனையடுத்து குடியாத்தம் உதவி மாவட்ட ஆட்சியர் தாசில்தார் நகராட்சி பொறுப்பாளர் நீர்வள ஆதார துறை அதிகாரிகள் ஆகியோர் இந்த ஏரிக்கு தண்ணீர் வருவதை கண்காணித்து வருகின்றனர். மேலும் ஏரி நிரம்பி வழிவதால் சுற்றுப்புற கிராமங்களில் வசித்து வரும் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *