“கணவர் வீட்டிற்கு செல்கிறேன்” தாய்-மகன் சடலமாக மீட்பு…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

இளம்பெண் தனது குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள செட்டியபட்டி வேளாங்கண்ணிபுரம் பகுதியில் கூலி தொழிலாளியான ஸ்டீபன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்டீபனுக்கு அகினோ பிரின்சி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிகளுக்கு 3 வயதுடைய திமோஸ் லிவி என்ற ஆண் குழந்தை இருந்துள்ளான். இந்நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக கோபத்தில் அகினோ பிரின்சி தனது குழந்தையுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.

இதனையடுத்து தான் மீண்டும் கணவர் வீட்டிற்கு செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு அகினோ பிரின்சி தனது குழந்தையுடன் புறப்பட்டுள்ளார். அதன்பின் அவரின் பெற்றோர் ஸ்டீபனை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசிய போது பிரின்சி வீட்டிற்கு வரவில்லை என அவர் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் பிரின்சி மற்றும் குழந்தையை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். அப்போது தோமையார்புரம் அருகில் இருக்கும் 60 அடி ஆழ பாழடைந்த கிணற்றில் பிரின்சியும், குழந்தையும் சடலமாக கிடந்ததை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரின்சி மற்றும் குழந்தையின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பிரின்சி துப்பட்டாவால் தனது குழந்தையை இடுப்பில் கட்டி வைத்துக்கொண்டு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *