குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு…. பெண் எடுத்த விபரீத முடிவு…. புதுக்கோட்டையில் சோகம்…!!

கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையில் பெண் எலி மருந்தை தின்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அம்மானிப்பட்டு கிராமத்தில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வள்ளியம்மை என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த வள்ளியம்மை தனது வீட்டில் இருந்த எலி மருந்தை தின்று தற்கொலை செய்து கொண்டார்.

இதனை அடுத்து மயங்கிய நிலையில் கிடந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி வள்ளியம்மை பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *