ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கீழ்கரையை சேர்ந்த 33 பெண் ஒருவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கண்ணீர் மல்க மனு ஒன்றை கொடுத்துள்ளார். அதில் எனக்கு திருமணமாகி 1 ஆண் குழந்தை உள்ள நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றோம். தற்போது விவாகரத்து வழக்கு நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் கீழ்கரையை சேர்ந்த ஒருவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அவர் என்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்தார். இதனால் நான் கர்ப்பமடைந்த நிலையில் திருமணம் செய்து கொள்ளுமாறு கூறினேன். ஆனால் என்னை வலுக்கட்டாயமாக அவர் கர்ப்பத்தை கலைக்க வைத்தார். அதோடு தனக்கு பண தேவை இருப்பதாக கூறி ரூபாய் 2 லட்சம் வாங்கியுள்ளார். பின்னர் அவர் என்னை திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டார்.
ஆகவே அவரது வீட்டிற்கு சென்று நியாயம் கேட்டபோது என்னை அவரின் குடும்பத்தினர் ஆபாசமாக பேசியதோடு கொலை மிரட்டல் விடுத்தனர். இந்நிறையில் அவருக்கு தஞ்சையை சேர்ந்த பெண் ஒருவருடன் திருமண ஏற்பாடுகள் நடைபெறுகின்றது. இது தொடர்பாக கீழ்கரை காவல்நிலையத்தில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே திருமணம் செய்து கொள்வதாக கூறி என்னோடு உல்லாசமாக இருந்துவிட்டு இப்போது வேறு ஒரு பெண்ணுடன் நடக்க இருக்கும் அவருடைய திருமணத்தை தடுத்து நிறுத்தி எனக்கு நியாயம் கிடைக்க செய்ய வேண்டும். இல்லாவிடில் நான் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழி இல்லை என்று கூறப்பட்டிருந்தது.