“சொத்து தகராறால் வெட்டி கொலை செய்யப்பட்ட பெண் “திருநெல்வேலியில் பரபரப்பு !!…

திருநெல்வேலி  அருகே சொத்து தகராறு காரணமாக  பெண் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

திருநெல்வேலி  மாவட்டம் ஆயிரப்பேரி பகுதியை சேர்ந்த சிதம்பரம் என்பவர் குடும்பத்தினற்கும் அவரது உறவினர்களுக்கும் இடையே அடிக்கடி சொத்து தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்  கண்ணன் என்பவர் சிதம்பரம் மற்றும் அவரது மனைவியை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியதாக கூறப்படுகிறது.மேலும் இவர் சிதம்பரத்தின் அண்ணன் மகன் ஆவார்.

இதில் பலத்த காயமடைந்த சிதம்பரத்தின் மனைவி  மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சிதம்பரத்திற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இதுகுறித்து நெல்லை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.