மோட்டார் சைக்கிள்-மினி வேன் மோதல்…. பெண்ணுக்கு நடந்த விபரீதம்…. மதுரையில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது மினி வேன் மோதிய விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியில் கொண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோவிந்தம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு முத்துப்பாண்டி என்ற மகன் உள்ளார். இந்நிலையில் கோவிந்தம்மாள் தனது மகனுடன் மோட்டார் சைக்கிளில் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து திடியன் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது மாட்டுத்தீவனம் ஏற்றி வந்த மினி வேன் இவர்களின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதி விட்டது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த கோவிந்தம்மாளை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே கோவிந்தம்மாள் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.