கார் நேருக்கு நேர் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

நேருக்கு நேர் கார் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொக்கம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இதனை அடுத்து ராமகிருஷ்ணன் மற்றும் அவரின் உறவினரான 4 பேர் விருதுநகரிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிக்கு காரில் சென்று கோவில் தரிசனம் செய்துள்ளனர்.

அதன்பிறகு கோவில் தரிசனம் முடித்துவிட்டு வீட்டிற்கு மீண்டும் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு கார் நேருக்கு நேராக ராமகிருஷ்ணனின் காரின் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் 9 பேர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் சொக்கம்மாள் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.

இதனை பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சொக்கம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *